கனடாவில் சுமார் எட்டு மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக் காலமாக மாற்று திறனாளிகள் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என சுடடி;க்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
15 வயதுக்கும் மேற்பட்ட 27 வீதமான கனடியர்களுக்கு குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு விசேட தேவைப்பாடு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் மாற்றுத் திறனாளிகள் அல்லது விசேட தேவையுடைய மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பு அளவில் உயர்வடைந்துள்ளது.
ஏதேனும் ஓர் வகையிலான மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையானது மொத்தமாக எட்டு மில்லியனாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வறாhன மாற்றுத் திறனாளிகளினால் பொது இடங்களில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.