Reading Time: < 1 minute

கனடாவில் 6 பேரின் உயிர்களை காவு கொண்டதாக கட்டுமான நிறுவனம் ஒன்றின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொன்-ட்ரைன் என்ற கட்டுமான நிறுவனம் மீது இவ்வாறு ஆறு கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாரியோவின் பெய்ரே என்னும் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் ஆறு இய வயதினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டுமான நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக இவ்வாறு ஆறு பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஆழமான கொங்கிரீட் குழியில் வாகனம் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கவனயீனமான அடிப்படையில் கட்டுமான நிறுவனம் பணிகளில் ஈடுபட்டதன் காரணமாகவே இளையவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.