Reading Time: < 1 minute

கனடாவில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தடன் தொடர்புடைய நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1976ம் ஆண்டு கால்கரியில் பதின்ம வயது சிறுமியை (பாலின் பிராஸோ) கொன்ற நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அல்பெர்டாவைச் சேர்ந்த ரொனால்ட் ஜேம்ஸ் எட்வர்ட்ஸ், கொலைக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

16 வயதான பாலின் பிராஸோ என்ற சிறுமி சஸ்காட்சுவானில் இருந்து 1975ல் தனது குழந்தையுடன் கால்கரிக்கு குடியேறினார்.

1976 ஜனவரியில், கால்கரியில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனார்.

அவரது சடலம் நகரின் மேற்குப் பகுதியில் கத்தியால் ஒன்பது முறை குத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கரி பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் இந்த பழைய கொலை வழக்கு பிரிவு மரபணு ஆய்வுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ரொனால்ட் எட்வர்ட்ஸ் (Ronald Edwards) கைது செய்யப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.