கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவர் சத்திர சிகிச்சைக்காக நான்கு ஆண்டுகள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ச்ச்சில்லிவெக் என்னும் பகுதியைச் சேர்ந்த 76 வயதான கிளென் மில்லார்ட் என்ற நபரே இவ்வாறு நீண்ட காலம் சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கின்றார்.
முதுகில் சத்திர சிகிச்சை ஒன்றை செய்து கொள்வதற்காக அவர் இவ்வாறு காத்திருக்கின்றார்.
எழுந்து நிற்கபதற்கும் நடப்பதற்கும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிளென் தெரிவிக்கின்றார்.
கோவிட் காரணமாகவும் வேறும் காரணிகளினாலும் இவ்வாறு காத்திருக்க நேரிட்டுள்ளது என குறிப்பிடுகின்றார்.
தம்முடன் மேலும் 15000 பேர் சத்திர சிகிச்சைகளுக்காக காத்திருப்பு பட்டியலில் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனடாவின் சுகாதார கட்டமைப்பு குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் காணப்படுவதாகவும் கிளெனின் நண்பர் ஒருவர் செய்தி ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.