2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 9,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு மருந்துகளில், கிட்டத்தட்ட 25 சதவீத மருத்துகள் தற்போது, பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.எம்.ஜே.ஜே ஓபனில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, வன்கூவரை தளமாகக் கொண்ட சுகாதார மதிப்பீடு மற்றும் விளைவு அறிவியல் மையத்தில் ஒரு குழு நடத்தியது.
கனேடிய மருந்து பற்றாக்குறை தரவுத்தளத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட மருந்து தரவை குழு ஆய்வு செய்தது. அங்கு உற்பத்தியாளர்கள் 2017ஆம் ஆண்டு முதல் மருந்து பற்றாக்குறையை தெரிவிக்க வேண்டும்.
ஆய்வுக் காலத்தில் – மார்ச் 14ஆம் திகதி 2017ஆம் முதல் செப்டம்பர் 12ஆம் திகதி 2018ஆம் ஆண்டு வரை 23.4 சதவீதம் பற்றாக்குறை இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். பற்றாக்குறையின் சராசரி அளவு ஐந்து மாதங்கள்.
பொதுவான ஒரு மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சந்தையை வழங்கும் ஒரே மருந்து நிறுவனமாக இருந்தால், அது பற்றாக்குறையில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பேராசிரியர் அஸ்லம் அனிஸ் கூறியுள்ளார்.
எபிபென்ஸ் மற்றும் பார்கின்சன் நோய், கால்-கை வலிப்பு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கான சிகிச்சைகள் உட்பட மருந்துகளே இவ்வாறு பற்றாக்குறையாக உள்ளது.