கனடாவில் சுமார் 215 வாகனங்கள் கொள்ளையிட்ட கும்பல் ஒன்றின் 51 பேரை பொலிஸார் கைது ச்ச்யதுள்ளனர்.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு திட்டமிட்ட அடிப்படையில் வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட 215 வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களின் மொத்த பெறுமதி 17 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 51 பேருக்கு எதிராக 150 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து 15 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஒரு கிலோ கிராம் எடையுடைய கொக்கோய்ன் போதைப் பொருள், துப்பாக்கியொன்று உள்ளிட்டன கைப்பற்றப்பட்டுள்ளன.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் அண்மையில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்ற காரணத்தினால் அது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.