கனடா Surrey, B.C பகுதியில் உயர்நிலைப் பாடசாலையின் மைதானத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாரம் கொல்லப்பட்ட 18 வயது இளைஞரை பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்குக் காரணமான விடயங்கள் பற்றிய சில விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் மேலும் தகவல் தெரிந்தவர்கள் இருந்தால் முன்வருமாறு பொலிஸ் தலைமை அதிகாரி திமோதி பியரோட்டி வலியுறுத்தியுள்ளார்.
18 வயதான Mehakpreet Sethi என்பவருக்கு 17 வயதான சிறுவனுக்கும் இடையே மோதல் ஒன்று இடம்பெற்ற நிலையில் Mehakpreet Sethi மீது கத்தியால் குத்தப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸ் அதிகாரிகள் அவரை காப்பாற்ற முயற்சித்த போதிலும் முடியாமல் போயுள்ளது. 17 வயதுடைய நபர் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சந்தேக நபரும் பாதிக்கப்பட்டவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் எனவும் இது ஒரு சொந்த பிரச்சினையை அடிப்படையாக கொண்டதெனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையுடன் வேறு கும்பல் தொடர்புப்படவில்லை என நம்பப்படுகிறது என அவர் கூறியுள்ளார். “இந்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் பல மாணவர்கள் இருந்ததை நாங்கள் அறிவோம்.
இந்த இளைஞன் ஏன் கொல்லப்பட்டுள்ளார் என்பதை தொடர்பில் தகவல் அறிந்தால் அதனை தெரியப்படுத்துமாறு” உயர் பொலிஸ் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.