Reading Time: < 1 minute

ஹமில்டனில் 15 வயதான சிறுவன் ஒருவன் செலுத்திய வாகனத்தில் மோதுண்டு 15 வயதான மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் குறித்த 15 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அப்பர் பெரடைஸ் மற்றும் ஸ்டோன் சேர்ச் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் பாதையை கடக்க முயற்சித்த போது வாகனமொன்று சிறுவனை மோதுண்டுள்ளது.

விபத்தில் சிக்கி காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இந்த இரண்டு மாணவர்களும் புனித தோமஸ் மோர் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் பாடசாலையிலிருந்து சுமார் 550 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் இரங்கல் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.