Reading Time: < 1 minute

கனடாவில் 10 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்ட தீ விபத்துடன் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் மிஸ்ஸிசாகாவில் பகுதியில் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றில் பாரியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக சுமார் பத்து மில்லியன் டொடர்கள் நட்டம் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 29 வயதான நபரே பொலிசார் கைது செய்துள்ளனர்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீ விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வர்த்தக நிலையத்திற்கு பாரிய அளவில் நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்துக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது சந்தேகத்திற்கிடமான சில விடயங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் டைமண்ட் ஹார்பர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை மீறி செயல்பட்டதாக குறித்த சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை எடுக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.