கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.
நபர்கள் தங்களுக்கு விருப்பான காணித் துண்டை தெரிவு செய்து கொள்ள முடியும் எனவும் அந்த காணி 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.
வீடு நிர்மானம் செய்வதற்கான கால வரையறை உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் பத்து டொலர்களுக்கு காணித் துண்டு விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூவாயிரம் தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நகரில் சுமார் 1500 காணித் துண்டுகள் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
நகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த பத்து டொலர் காணித் துண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காணித்துண்டுகளை கொள்வனவு செய்வோரே பகுதியின் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பினையும் ஏற்க வேண்டுமென மேயர் தெரிவித்துள்ளார்.