Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் 2 மாத சிசுவொன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வுட்பைன் அவன்யூவில் இருந்து கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு மாதங்களேயான சிசு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாக அந்த சிசுவை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிசுவின் அருகாமையிலிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிசுவை காயப்படுத்தியமைக்கான போதியளவு ஆதாரங்களுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிசுவிற்கும், குறித்த சந்தேக நபருக்கும் என்ன உறவு என்பது இன்னமும் தெரியவரவில்லை.

ஒரே அறையில் சிசுவும் சந்தேக நபரும் தங்கியிருந்த காரணத்தினால் ஏதெனும் உறவு இருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த அறையிலிருந்த மற்றுமொருவர் 911 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அழைத்து சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.