Reading Time: < 1 minute

கனடாவில் ஹொக்கி விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளான்.

ஹொக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் புக் அல்லது பந்து கழுத்துப் பகுதியில் பட்டதனால் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இந்த துரதிஸ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு அங்கி
வடமேற்கு மொன்றியாலில் நடைபெற்ற ஹொக்கி போட்டியொன்றின் போது சிறுவனின் கழுத்துப் பகுதியில் பந்து பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறுவன் ஹொக்கி விளையாடும் போது அணியும் சகல பாதுகாப்பு அங்கிகளையும் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் பெற்றோரையும், சிறுவனின் நண்பர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஹொக்கி பந்து கழுத்தில் பட்டும் மரணம் நிகழும் சம்பவங்கள் மிகவும் அரிதானது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.