Reading Time: < 1 minute

கனடாவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சிறுவர் சிறுமியர் சளிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சளிக்காய்ச்சல் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சளிக்காய்ச்சல் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அநேகமான வைத்தியசாலைகளில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர் சிறுமியர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியது மிகவம் அவசியமானது என கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

ஐந்து வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியர்களே அதிகளவில் சளிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உடன் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.