Reading Time: < 1 minute

கனடாவில் வேலை வாய்ப்பு அற்றோர் எண்ணிக்கையானது 5.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் கனேடிய பொருளாதாரத்திற்கு புதிதாக 10000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நிதி, காப்புறுதி, ரியல் எஸ்டேட், உற்பத்தி போன்ற துறைகளில் இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை, கட்டுமானத்துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு வேலை வாய்ப்பு அற்றோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நோய் நிலைமைகள் காரணமாக சில ஊழியர்கள் நவம்பர் மாதத்தில் சுகவீன விடுமுறை எடுத்துக்கொண்டுள்ளனர்.