Reading Time: < 1 minute

கனடாவில் வெள்ளம் காரணமாக ரயில் பாதை அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஹாலிபெக்ஸ் பகுதியின் ரயில் பாதையின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நோவா ஸ்கோட்டியாவின் மில்புருக் அருகாமையில் இவ்வாறு ரயில் பாதை அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

ரயில் பாதை அமைந்திருந்த மண் பகுதி முழுமையாக கழுவிச் செல்லப்பட்டுள்ளதனால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ரயில் பாதை அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பாதை கழுவிச் செல்லப்பட்ட காரணத்தினால் குறித்த பகுதிக்கான ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக தற்போதைக்கு திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.