கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் என்ற போர்வையில் சில மோசடி சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிற்குள் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் கனடாவிற்கு வரும் வெளிநாட்டுப் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது.
கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாணவர்களின் வருகையானது வெறும் வீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் குடியேற்றக் கொள்கைகளின் நம்பகத்தன்மையை சவாலுக்கு உட்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் சுமார் ஒன்பது லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மாணவர் வீசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், சிலர் அதனை துஸ்பிரயோகம் செய்வதாகவும் குடிவரவு அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.