கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்ப்பட உள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது.
கனடாவின் வீட்டு அடைமானம் மற்றும் வீட்டு வசதி அமைப்பினால் இது குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி இந்த தடை குறித்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
தற்காலிக வேர்க் பர்மிட்கள், ஏதிலிக் கோரிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் போன்றவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் வீடு கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது.
நாட்டில் நிலவி வரும் வீட்டு வசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.