Reading Time: < 1 minute

கனடாவில் வெறுப்புணர்வை தூண்டும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான வெறுப்புணர்வு குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

டொரண்டோ போலீசார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

வெறுப்புணர்வை தூண்டும் குற்றச் செயல்கள் தொடர்பில் வழமையாக கிடைக்கும் தொலைபேசி முறைப்பாடுகளை விடவும் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்க பெறுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பமானதன் பின்னர் இந்த தொலைபேசி வழி முறைப்பாடுகளின் எண்ணிக்கை 132 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு இந்த வெறுப்புணர்வு குற்ற செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் 7ம் திகதி வரையில் வெறுப்புணர்வு தொடர்பிலான 237 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும், கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் 192 சம்பவங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்படுகிறது.

போர் பதற்றம் ஆரம்பமானதன் பின்னர் டொரன்டோ போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.