கனடாவில் வீட்டு விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ரியல் எஸ்டேட் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஓராண்டு கால ஒப்பீட்டு அடிப்படையில் கடந்த மாதத்தில் வீட்டு விற்பனை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
புதிதாக வீடுகள் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பங்களும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வீட்டு விலைகளும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வீட்டு விலை 18.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கனடாவில் கடந்த மாதம் சராசரி வீட்டு விலை 666437 டொலர்கள் எனவும், ஓராண்டுக்கு முன்னதாக இந்த தொகை 816578 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது பெப்ரவரி மாதத்தில் வீட்டு விற்பனை 2.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.