கனடாவில் வீடுகளுக்கான பிரச்சனை தற்போதைக்கு தீர்வு காணப்படாது என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வீட்டு பிரச்சனைக்கு தீர்வுகளை எட்டுவதற்கு சில ஆண்டுகள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 80 ஆண்டுகளில் அதிக அளவு வீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வந்தாலும் தேவைகள் மிக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே தற்போதைக்கு வீட்டு பிரச்சனைகள் கனடாவில் தீர்க்கப்படுவது சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள், நகராட்சிகள், தனியார் துறை நிறுவனங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவ்வாறு செயல்பட்டாலும் பிரச்சினையை தீர்ப்பதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.