Reading Time: < 1 minute

கனடாவில் வீட்டில் யாருமில்லை என்ற அடிப்படையில் விதிக்கப்பட்ட வரியினால் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த தம்பதியினருக்கு எதிர்பாராத விதமாக இவ்வாறு வரி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

வீடுகளை காலியாக வைத்திருப்பவர்களுக்கு மாகாணத்தில் ஓர் வரி அறவீட்டு முறை காணப்படுகின்றது.

வேகன்சி வரி என இந்த வரிக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை பயன்படுத்தாது வைத்திருப்பவர்களிடமிருந்து இந்த வரி அறவீடு செய்யப்படுகின்றது.

எனினும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுகளைச் சேர்ந்த மெடிசன் மற்றும் சார்லட் பக்கீரா தம்பதியினர் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு வரி செலுத்துமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் லேடிஸ்மித் பகுதியில் இவர்களது வீடு அமைந்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக 13,000 டாலர்களை செலுத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தம்பதியினர் குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளனர்.

வீட்டிற்கு வரி செலுத்த போதியளவு பணமில்லாத காரணத்தினால் வீட்டை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.