Reading Time: < 1 minute
கனடாவில் உள்ள வீட்டிற்குள் இரண்டு பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் கோல்ஸ்டீரிமில் உள்ள வீட்டிற்கு தகவலின்பேரில் பொலிசார் சென்றனர். அப்போது அங்கு இரண்டு ஆண்கள் சடலமாக கிடந்தனர், அருகே மற்றொருவர் படுகாயங்களுடன் இருந்தார்.
நான்காவது நபரும் அங்கு நின்றிருந்த நிலையில் அவரை பொலிஸார் விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.