Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், வீடொன்றிற்கு பேருந்துகளில் வரிசையாக இளம்பெண்கள் வந்திறங்குகிறார்கள்.

அவர்கள் நடத்தும் பார்ட்டியால் வீடுகளில் பிள்ளைகளுடன் நிம்மதியாக இருக்க முடியவில்லை என அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டன் நகரில் அமைந்துள்ள வீடொன்றிற்கு கடந்த சனிக்கிழமை பேருந்துகள் வரிசையாக வந்துள்ளன.

அந்த பேருந்துகளிலிருந்து இளம்பெண்கள் இறங்கி அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.

வாடகைக்கு விடப்பட்டுள்ள அந்த வீட்டில், அந்த இளம்பெண்கள் ஆட்டமும் பாட்டுமாக பார்ட்டி கொண்டாட, அக்கம்பக்கத்தில் குடும்பத்துடன் வாழும் மக்கள் சத்தத்தால் அவதியுற்று வருவதாக அந்த பகுதியில் வாழும் Marion Warren என்பவர் தெரிவிக்கிறார்.

வார இறுதியில் கூட்டம் கூட்டமாக இளம்பெண்கள் வந்திறங்க, அந்த தெரு முழுவதுமே பெண்களால் நிறைந்திருந்ததாக தெரிவிக்கிறார் அவர்.

அவர்கள் எழுப்பும் சத்தம், வீட்டு படுக்கையறை வரை கேட்பதாகவும், தூங்க இயலவில்லை என்றும் கூறுகிறார் அவர்.

இதற்கிடையில், அந்த வீட்டின் உரிமையாளர், தான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும், அங்கு இப்படி கூட்டம் கூட்டமாக பெண்கள் வருவார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

அதிகாரிகள் அந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.