வீடு ஒன்றை கொள்வனவு செய்வதாக உறுதிமொழி வழங்கி அந்த வீட்டினை கொள்வனவு செய்யாத நபர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வீட்டுமனை விற்பனை குறித்த இணையதளங்களில் பட்டியலிடப்பட்டிருந்த வீடு ஒன்றை கொள்வனவு செய்வதாக சிலர் வீட்டு உரிமையாளரிடம் உறுதிமொழி வழங்கியிருந்தனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாயாவில் அமைந்துள்ள வீடு ஒன்றை சுமார் 11 மில்லியன் டாலர்களுக்கு கொள்வனவு செய்வதாக உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது. எனினும் உறுதிமொழி அளிக்கப்பட்டதன் பிரகாரம் குறிப்பிட்ட காலத்தில் இந்த வீட்டை கொள்வனவு செய்யப்படவில்லை.
இந்த வீடு கொள்வனவு செய்யப்படவில்லை இந்த விவகாரம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரும் கொள்வனவாளர்களும் உச்ச நீதிமன்றில் பரஸ்பர வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
வீடு கொள்வனவு செய்வதாக உறுதியளிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் குறித்த நபர்கள் வீட்டை கொள்வனவு செய்யவில்லை.
இந்தக் காலப் பகுதியில் சந்தையில் வீட்டின் பெறுமதி வீழ்ச்சி அடைந்திருந்தது.
இதன் காரணமாக குறித்த நபர் வேறு ஒருவருக்கு குறைந்த தொகைக்கு இந்த வீட்டை விற்பனை செய்ய நேரிட்டுள்ளது.
இவ்வாறு குறைந்த தொகைக்கு வீட்டை விற்பனை செய்த காரணத்தினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யுமாறு முன்னதாக வீடு கொள்வனவு செய்வதாக உறுதியளித்த நபர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் வரையில் நட்ட ஈடாக செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.