கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திய பெண் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாக நேரிட்டுள்ளது.
தங்கியிருக்க முடியாத நிலையிலான வீடொன்றுக்கு ஆறு மாத காலமாக குறித்த பெண் வாடகை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கின்றார்.
லின்ட்ஸே மெகார்த்தி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் இவ்வாறு வாடகை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் பல்வேறு இடங்களில் பூஞ்சனம் காணப்படுவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
வீட்டில் கறுப்பு நிறத்தில் படிந்துள்ள பொருள் என்ன என்பது தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது போது இது பூஞ்சனம் என கண்டறிந்துள்ளனர்.
இந்த பூஞ்சன வகை மிகவும் நச்சுத்தன்மையுடையது என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த வீட்டில் வாழ முடியாத நிலை காணப்படுவதாக குறித்த பெண் தெரிவிக்கின்றார்.
வீட்டின் வாகன தரிப்பிடம், குளியலறை, சமையலறை போன்ற பல்வேறு இடங்களில் பூஞ்சன வகையை காண முடிவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த தமக்கும் தமது ஒரு மகளுக்கும் இந்த பூஞ்சனம் ஆபத்து ஏற்படுத்தும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அந்த வீட்டில் சில நிமிடங்கள் கூட தங்கியிருக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் வீட்டில் இருந்தபோது தமது நாக்கு மற்றும் தொண்டை பகுதி வீக்கம் அடைந்ததாகவும், உடலில் அரிப்பு தன்மை ஏற்படுவதாகவும் மெக்கார்த்தி தெரிவிக்கின்றார்.
வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தபோது கடுமையாக நோய்வாய் பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் குறித்து வீட்டு உரிமையாளர்களிடம் பேசியபோது ஆரம்பத்தில் உதவுவதாக கூறிய போதிலும் உதவ மறுத்து விட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்பொழுது இந்த வீட்டை விட்டு வேறு ஒரு அறையில் சிறிய இடத்தில் தங்கியிருப்பதாகவும் வீட்டு உரிமையாளர்கள் உரிய உதவிகளை வழங்க தவறியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் தாம் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் சபையில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.