Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் வீடு உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த வீடு உடைப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேக நபர்கள் வீட்டுக்குள் ஆயுதத்துடன் பிரவேசித்து வாகனம் ஒன்றின் சாவியை தருமாறு மிரட்டி பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மிரட்டி பெற்றுக் கொள்ளப்பட்ட வாகனம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த வீடு உடைப்பு மற்றும் வாகன கொள்ளை சம்பவங்கள் தொடர்பான காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்கள் பல்வேறு இடங்களில் இவ்வாறு வீடுகளை உடைத்து களவாடியுள்ளதுடன் வாகனங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுத முனையில் அச்சுறுத்தி இந்த நபர்கள் வாகன கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.