Reading Time: < 1 minute
கனடாவில் வீடுடைப்பு சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏழு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 13 வயதான சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வோகனில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிடுவதற்காக களவாடப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 13 முதல் 18 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.