கனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அல்லது பயணிகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
எவ்வாறெனினும், முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளில் காலம் தாழ்த்தப்படுவதாகவும் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனங்களுக்கு எதிராக பயணிகளால் செய்யப்பட்ட 71000 முறைப்பாடுகள் இதுவரையில் விசாரணைக்கு உட்படுத்தி தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விமான பயணங்கள் ரத்து செய்யப்படுவதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்காக பயணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்வு வழங்கப்படுவதில்லை என பயணிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முறைப்பாடுகளை பரிசீலனை செய்யும் காலத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக பயணிகள் அதிக அளவில் முறைப்பாடுகள் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
202324 ஆம் நிதி ஆண்டு கால பகுதியில் சுமார் 43 ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.