Reading Time: < 1 minute

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம் ஓடு பாதையிலிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானது.

சீரற்ற காலநிலை காரணமாக விமானம் ஓடு பாதையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக விபத்துக்குள்ளான விமானம் ஓடுபாதையில் அதே நிலையில் காணப்பட்டது.

விசாரணை அதிகாரிகளின் ஆய்வின் பின்னர் குறித்த விபத்துக்குள்ளான விமானம் ஓடு பாதையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.