கனடாவில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறைக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் கார்பிரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்த முறைமைக்கு கூடுதல் ஆதரவினை வெளியிட்டு வருகின்றனர்.
ரொபர்ட் ஹால்ப் என்ற வேலைக்கு ஆட்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனமொன்று கருத்துக் கணிப்பு மேற்கோண்டுள்ளது.
இதில் பங்கேற்ற 91 வீதமான சிரேஸ்ட முகாமையாளர்கள் நான்கு நாள் வேலை என்னும் நடைமுறைக்கு ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப் பகுதியில் அநேகமான நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற நடைமுறையை அமுல்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
வாரத்தில் நான்கு நாட்கள் 10 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கு விரும்புவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற தொழிலாளர்களில் 75 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என்ற நடைமுறையானது பணியாளர்களின் செயற்திறனை மேம்படுத்தும் என்பதுடன், அவர்களது நலனையும் உறுதிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடாவில் எதிர்வரும் காலங்களில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறை அமுல்படுத்தக்கூடிய சாத்தியங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.