Reading Time: < 1 minute

கனடாவில் 134 பயணிகளுடன் பயணம் செய்த விமானமொன்று ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது.

ப்ளயர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது.

தரையிறக்கப்பட்ட போது இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ப்ளயார் விமான சேவை நிறுவனத்தின் F8 501 என்ற விமானத்தில் பயணம் செய்த பயணிகளே இந்த திகில் அனுபவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் பாதுபாப்பாக விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டுள்ளனர்.

வான்கூவாரிலிருந்து இந்த விமானம் வாட்டர்லூ நோக்கிப் பயணித்துள்ளது.

விமானம் ஓடு பாதையை விட்டு விலகி புல்வெளிக்குள் தரித்து நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

என்ன காரணத்தினால் இவ்வாறு விமானம் ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.