Reading Time: < 1 minute

கனடாவில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு அரசு ஒரு உதவியை அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் உதவி

நேற்று, அதாவது,திங்கட்கிழமை முதல், கனடாவில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு அரசு 500 டொலர்கள் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

யார் இந்த உதவித்தொகையை பெற தகுதியுடையவர்கள்?

இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோர், குறைந்தபட்சம் 15 வயதுடையவர்களாகவும், 2022ஆம் ஆண்டில், தங்கள் 2021ஆம் ஆண்டின் வருவாயில் 30 சதவிகிதத்தையாவது வாடகையாக செலுத்தியவராக இருக்கவேண்டும்.

அத்துடன், 35,000 டொலர்கள் அல்லது அதற்குக் குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களாகவாவது, அல்லது, 20,000 டொலர்கள் அல்லது அதற்குக் குறைவான வருவாய் கொண்ட தனிநபராகவாவது இருக்கவேண்டும். அத்துடன், அவர்கள் 2021ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்திருக்கவும் வேண்டும்.

மேலும், தாங்கள் வாடகை செலுத்துவதற்கான ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.

தகுதியுடையோர், பெடரல் அரசின் இணையதளம் (CRA) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.