கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் நிதிநெருக்கடி நிலையையும் தனிமையையும் உணர்வுதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்களுடன் ஒப்பீடு செய்யும் போது வாடகைக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரம் குறைவானதாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகைக் குடியிருப்பாளர்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
55 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகளவில் வீடுகளுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர் எனவும் இளம் தலைமுறையினர் வீடு கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்ளட்ளது.
வட்டிவீதம், சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஏதுக்களினால் வாடகை குடியிருப்புக்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.