Reading Time: < 1 minute
கனடாவில் வாகன விபத்துச் சம்பவமொன்றில் 100 வயதான மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நோர்த் யோர்க்கின் ஸ்டீலிஸ் அவன்யூ மற்றும் புலுப்வுட் ட்ரைவ் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
100 வயதான மூதாட்டி பாதையோரத்தில் நடந்து சென்ற போது வேகமாக சென்ற வாகனம், மூதாட்டியை மோதிச் சென்றுள்ளது.
64 வயதான நபர் ஒருவர் செலுத்திய வாகனத்தில் குறித்த மூதாட்டி மோதுண்டதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.