Reading Time: < 1 minute
கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார் (Yogesh Kumar), 22 வயதான அஜ்பிரீத் சிங் (Ajpreet Singh), 23 வயதான கலிடானைச் சேர்ந்த 25 வயதான அம்ரித்பால் சிங், 23 வயதான சுமித் சுமித் ஆகியோரே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கும்பல் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலிடோ பகுதியிலிருந்து களவாடப்பட்ட வாகனம் ஒன்று ஒன்ராறியோவுக்குள் பிரவேசித்த வேளையில் அது திருடப்பட்ட வாகனம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.