Reading Time: < 1 minute

கனடாவில் வாகன திருட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில மாகாணங்களில் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக காப்புறுதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று சுட்டி காட்டியுள்ளது.

கடந்த 202 வாகன திருட்டு சம்பவங்களின் காரணமாக காப்புறுதி நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட தொகையினால் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கியூபெக் மாகாணத்தில் வாகனத் திருட்டு சம்பவங்கள் ஐம்பது வீதத்தினால் உயர்வு அடைந்துள்ளது எனவும் ஒன்றாரியோ மாகாணத்தில் வாகன திருட்டு சம்பவங்கள் 48 விதத்தினால் உயர்வடைந்துள்ளது எனவும் அத்லாந்திக் கனடா பகுதியில் 34 வீதம் உயர்வடைந்துள்ளது எனவும் ஆல்பர்ட்டாவில் 18 வீதத்தினாலும் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்ட அடிப்படையில் கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் கூடுதல் அளவில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.