கனடாவில் வாகனங்களை கௌர்வனவு செய்வோருக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
குறிப்பாக ஒன்றாரியோவில் சட்டவிரோத வாகன விற்பனைகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விற்பனை செய்வதற்கு போதியளவு வாகனங்கள் இல்லாமை, வாகனங்கள் நாட்டுக்கு போதியளவு விநியோகம் செய்யப்படாமை போன் காரணிகளினால் வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
அதிக சந்தர்ப்பங்களில் வாகனங்கள் கொள்iளியடப்படுவதாகவும், இவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத வாகன விற்பனைகளை தடுக்க ரொறன்ரோ பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வாகனங்கள் விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள் பல்வேறு காரணிகளை கருத்திற் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்வாறான வாகன மோசடிகள் பற்றிய தகவல்கள் இருந்தால் அதனை அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.