கனடாவில் பல்வேறு வன்முறை வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வயது வந்தவர் எனவும் ஏனைய இருவரும் பதின்ம வயதினை உடையவர்கள் எனவும் டொரொண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக இதுவரையில் மொத்தம் 77 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 23 முதல் பெப்ரவரி 22ம் திகதி வரை ஆறு கார் கொள்ளைகள் மற்றும் இரண்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி 27, 2025 திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு தொடர்புண்டு என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 1ம் திகதி பொலிஸார் நான்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு மூன்று நபர்களை கைது செய்தனர்.
மேலும், ஒரு துப்பாக்கி மற்றும் சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரங்களை மீட்டுள்ளனர். களவாடப்பட்ட மூன்று வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.