கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய மத்திய வங்கியின் நிதிக்கொள்கை குறித்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் தங்களது வாகனக் கடனை செலுத்த முடியாது அவதியுறுகின்றனர்.
நாட்டில் கடன் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தினால் கடன் பெற்றுக்கொண்ட கனடியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் கனடாவில் புதிய மற்றும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கார்களுக்கான குத்தகை மற்றும் கடன் வட்டி உள்ளிட்ட கட்டணத் தொகைகளும் உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கூடுதல் தொகையை செலவிட நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.