கனடாவில் லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் 33 வீதமானவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, லிபரல் கட்சிக்கு 30 வீதமான மக்களே ஆதரவளிப்பார்கள் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
மாதாந்தம் நடாத்தப்பட்டு வரும் இந்தக் கருத்துக் கணிப்பில் கடந்த நான்கு மாதங்களாக கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை வகிக்கின்றது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பியரே பொலிவிர் அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வறெனினும் கன்சர்வேட்டிவ் மற்றும் லிபரல் கட்சிக்கான மக்கள் ஆதரவு பொதுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
என்.டி.பி கட்சிக்கான ஆதரவு 19 வீதத்திலிருந்து 21 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கனேடிய மக்கள் கட்சிக்கான ஆதரவும் இரண்டு வீதத்திலிருந்து நான்கு வீதமாக அதிகரித்துள்ளது. இணைய வழியாக இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றது.