Reading Time: < 1 minute

கனடாவில் வறுமை காரணமாக 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய மருத்துவ சங்க இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனேடிய மக்களில் அதிகமானவர்கள் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தால் உளவியல் ரீதியான துயரத்துக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.