Reading Time: < 1 minute
கனடாவில் வங்கி வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட்டி வீத அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண முதல்வர் டேவிட் எபி கோரியுள்ளார்.
நாட்டின் மத்திய வங்கியின் ஆளுனர் ரிக் மெக்கலமிடம்இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் வட்டி வீதங்கள் உயர்த்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் வங்கி வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டாம் என பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர் கோரியுள்ளார்.
வங்கி வட்டி வீத அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை கருத்திற் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வட்டி வீதங்களை உயர்த்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.