Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் இரண்டு பெண்கள் வங்கி மோசடி காரணமாக சுமார் 80 ஆயிரம் டொஷலர்களை இழந்துள்ளனர்.

போலி தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கி விசாரணையாளர்கள் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கி மோசடி விசாரணை பிரிவிலிருந்து அழைப்பு ஏற்படுத்துவதாக கூறி வாடிக்கையாளர்களின் தரவுகளை பெற்றுக் கொண்டு அவற்றைக் கொண்டு இவ்வாறான மோசடிகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்.பி.சி மற்றும் ஸ்கொட்டி வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இரண்டு பெண்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஸ்காட்டி வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பெண் ஒருவரிடம் 50000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று ஆர்.பி.சீ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மற்றுமொரு பெண்ணிடமிருந்து 34 ஆயிரம் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தொலைபேசியில் வாடிக்கையாளர்களின் ஓடிபி விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற்றுக் கொண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கியின் இலக்கத்திற்கு நிகரான இலக்கங்களை கொண்டு இந்த மோசடி இடம் பெறுவதாக மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.