Reading Time: < 1 minute

கனடாவில் வங்கிக் கொள்கைகளில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் றொரன்டோவை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளைகளுடன் குறித்த நபருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரையிலான காலப் பகுதியில் மொத்தமாக 9 வங்கிக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

முகமுடி அணிந்து வங்கிகளுக்குள் பிரவேசித்து இவ்வாறு குறித்த நபர் கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கியை காண்பித்து குறித்த நபர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

59 வயதான டெனியல் க்ளாட்டினி என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் 21 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.