Reading Time: < 1 minute

கனடாவில் ரயில் நிலையமொன்றிற்கு அருகாமையில் ஆறு பேரை தாக்கிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குயின் மற்றும் டெவிஸ்வெலி வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள யொங் வீதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரீ.ரீ.சீ ரயில் சேவையின் லைன்1 பகுதியில் அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை, பொலிஸ் விசாரணை அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார்.

கைது செய்த போது அவர் கடமையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

எனினும், போத்தல்களைக் கொண்டு குறித்த பெண் சிலரைத் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காமயடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

றொரன்டோவைச் சேர்ந்த 31 வயதான ஹார்மினியா ஹசன் என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் இந்த பெண்ணுக்கு எதிராக 13 குற்ற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.