Reading Time: < 1 minute

கனடாவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கனடாவின முன்னணி ரயில் சேவைகளில் ஒன்றான Go ரயில் சேவை நிறுவனம் இது பற்றி அறிவித்துள்ளது.

பயணிகள் உரிய நேரத்திற்கு முன்னதாகவே ரயிலில் ஏறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிவிக்கப்படும் நேரத்திற்கு முன்னதாகவே கதவுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

புறப்படும் நேரத்திற்கு ஓரு நிமிடத்திற்கு முன்தனாகவே கதவுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் ரயில் சரியான நேரத்திற்கு புறப்படவும் சரியான நேரத்திற்கு செல்லவும் முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.