Reading Time: < 1 minute

கனடாவில் யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 5 சிறுவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் பதின்ம வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சிறுவர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

நோர்வூட் அவென்யூ மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யுவதியை வேறு ஒர் இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.