Reading Time: < 1 minute
கனடாவில் பாரியளவில் மோசடிகளில் ஈடுப்டட அரசாங்க ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கனடிய வருமான முகவர் நிறுவனத்தில் கடமையாற்றிய சுமார் 330 பேர் இவ்வாறு பணி நீக்கம் செய்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மோசடியான முறையில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 600 பணியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் காலத்தில் தொழில்களை இழந்தவர்களுக்கு அரசாங்கம் மாதாந்த கொடுப்பனவாக 2000 டொலர்களை வழங்கியிருந்தது.
இந்தக் கொடுப்பனவு தொகையை மோசடியாக பெற்றுக்கொண்டவர்களே தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.