கனடாவில் வயோதிய பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பெண் ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிராபத்து ஏற்படும் அளவிற்கு மோசமாக பெண் ஒருவர் மீது மற்றுமொரு பெண் தாக்குதல் நடத்தியுள்ளார்.
றொரன்டோவின் டவுன்போர்த் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
62 வயதான பெண் ஒருவர் நடைபாதை வழியாக நடந்து சென்ற போது எதிரில் வந்த பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
எவ்வித எச்சரிக்கையும் விடுக்காது பெண்ணை தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்தியவர் என்ற சந்தேகத்திற்கு இடமான பெண் குறித்த புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ள்ளது.