Reading Time: < 1 minute
கனடாவில் சுமார் 70 ஆண்டுகள் இயங்கி வந்த விமான நிலையம் ஒன்று மூடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
ஓடு பாதையுடன் கூடிய விமான நிலையமே இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக இந்த விமான நிலையம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விமான நிலையம் அதிக அளவில் பயன்படுத்துவதில்லை எனவும் இதன் ஓடு பாதையை பராமரிப்பதற்காக அதிக அளவு செலவிட நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் 1953 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.